Monday, January 11, 2010

இந்தியாவின் மூபெரும் அணுவிஞ்ஞானிகள்


இந்தியாவின் மூபெரும் அணுவிஞ்ஞானிகள்



ராகுல் காந்தி, மன்மோகன் சிங்க் சொன்னது:
நதிகளை இணைத்தால் பெரும் ஆபத்து நேரிடும்,இயற்கையோடு விளயடக்குடாது .


( படத்தை பெரிதாக பார்க்க படத்தில் கிளிக் செய்யவும் )

உங்கள் கனிவான கருத்தையும் ஓட்டுகளையும் போட்டு செல்லவும் .

Monday, November 16, 2009

கார்ட்டூன் - மெரினா பீச்ல.....

கார்ட்டூன் - மெரினா பீச்ல.....


( படத்தை பெரிதாக பார்க்க படத்தில் கிளிக் செய்யவும் )

உங்கள் கனிவான கருத்தையும் ஓட்டுகளையும் போட்டு செல்லவும் .

Friday, November 13, 2009

கார்ட்டூன் - சீனா இந்தியா உறவு






கார்ட்டூன் - சீனா இந்தியா உறவு


( படத்தை பெரிதாக பார்க்க படத்தில் கிளிக் செய்யவும் )

உங்கள் கனிவான கருத்தையும் ஓட்டுகளையும் போட்டு செல்லவும் .

Wednesday, November 11, 2009

கார்ட்டூன் - இந்தியாவின் எல்லைகள் .







இந்தியாவின் எல்லைகள் .

( படத்தை பெரிதாக பார்க்க படத்தில் கிளிக் செய்யவும் )

Friday, November 6, 2009

கார்ட்டூன் - இந்திய வெளியுறவு கொள்கை



இந்திய வெளியுறவு கொள்கை இந்த அளவுக்கு தான் இருக்கிறது .

( படத்தை பெரிதாக பார்க்க படத்தில் கிளிக் செய்யவும் )

Monday, April 27, 2009

சுவிஸ் வங்கி ஒரு பார்வை


உலகிலேயே மிக வளம் பொருந்திய நாடாக இந்தியா திகழ்ந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு வெள்ளையர்கள் கொல்லையடிததைவிட மிக அதிகமாக நம்மவர்களே நமது நாட்டின் வளத்தை சுரண்ட ஆரம்பித்தனர்

இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட,ஊழல் மூலம் சுரண்டப்பட்ட கணக்கில் வராத பணம் சுவிஸ் வங்கிகளில் ஏராளமாக பதுக்கி வைக்கபட்டுஇருபதாக சமிபகாலமாக பெரும் சர்ச்சை உருவாகிஉள்ளது.இங்கிலாந்தில் நடைபெற்ற G-20
நாடுகளின் மாநாட்டிலும் இதுகுறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது.தற்போது சர்வதேச அரங்கில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி ,இங்கிலாந்து ,பிரான்ஸ் நாடுகளில் பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது.

தங்களது நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரிகட்டுவதற்காக மேற்கண்ட நாடுகள் பெரும் முயற்சியை எடுத்து வருகின்றன .சுவிஸ் வங்கிகள் போன்ற பணம் பத்துக்கும் வங்கிகளில் இந்தியா நாட்டுப் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதுபோல , மேற்கண்ட நாடுகளின் பணமும் அங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது .

உலகம் முழுவதும் இத்தகைய பணம் பத்துக்கும் வங்கிகள்,சுமார் 40 உள்ளன.
சுவிஸ் ,மலேசியா ஒட்டியுள்ள திவுகளில் இத்தகைய பணம் பத்துக்கும் வங்கிகள் உள்ளன . இந்த வங்கிகளில் கணக்கில் வராத பணம் மட்டுமல்லாமல் , உலகம் முழுவதும் குற்றச்செயலில் ஈடுபட்டு கொள்ளை அடிக்கபடுகின்ற பணமும் பதுக்கபடுகிறது .

இந்த வங்கிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது ? எப்படி வருகிறது ?
யார் மூலம் வருகிறது ? எதனால் வருகிறது ? என்பதை பற்றிஎல்லாம் கவலை இல்லை. பணம் கொடுத்தல் பதுக்கி வைத்து ரகசியத்தை காப்பாற்றி பணத்தை திருப்பி கொடுப்பார்கள். இதன் காரணமாக உலகின் பல பகுதிகளிலும் கொள்ளை அடிப்பவர்களும் ,கொலை செய்பவர்களும் போதை மருந்து கடத்துபவர்களும்,ஆயுத பேர ஊழல்கள் செய்பவர்களும் தங்களது பணத்தை இந்த வங்கிகளில் பாதுகாப்பாகவைதுள்ளனர். இதன் காரணமாக , உலக அளவில் பயங்கரவாதமும் ,வன்முறைச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

சமிபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கவும் ,பயங்கரவாத செயல்களைத் தடுக்கவும் பெரும் முயற்சி எடுத்துவரும் அமெரிக்கா அதிபர் ஒபாமா , சுவிட்சர்லாந்து நாட்டிற்கு இது விசயத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

தங்கள் நாட்டுக்குச் சொந்தமான பணம் சுவிஸ் வங்கிகளில் முடங்கிகிடப்பதை மீட்பதற்காக அமெரிக்காவில் போதிய சட்டதிருத்தங்களை செய்து வருகிறார் ஒபாமா.பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் இது விசயத்தில் சுவிஸ் மீதும் இதகி பணம் பத்துக்கும் வங்கிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மன்னிக்கவும்.நன்றி நன்றி விவாதிப்பதற்கு மட்டும்தான் G-20மாநாடுகளில் பங்கேற்றி இருபதாகவும் அறிவித்துள்ளனர்.ஏற்கனவே ஜெர்மனி புலனாய்வு அதிகாரிகள் இத்தகைய பணம் பத்துக்கும் வங்கி ஒன்றிலிருந்து ரகசியக் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை சாமர்த்தியமாகப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து அந்த நாட்டின் தினசரி ஒன்றில் , நிதி அமைச்சரின் பேட்டி வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியர்கள் சிலர் இடம் பெற்றிருப்பதாகவும்,இதுகுறித்த விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள தயார் என்று அறவித்துள்ளது.

ஆனால் நமது நாட்டு ஆளுங்கட்சியினரும் , பிரதமரும் ,நிதி அமைச்சரும் இதுகுறித்து மௌனம் சாதித்து வருகின்றனர். G-20
மாநாட்டில் இதுபற்றி நமது நாட்டின் சார்பில் எந்தக் கேள்வியும் எழுப்பப்படவில்லை.G-௨0 மாநாடுகளில் இதுகுறித்து விவாதிக்க முடியாது என்றும் சுவிஸ் நாட்டின் மீது பழிப்போட இடம் மாநாடு அல்ல என்றும் காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார் .

மன்மோகன் சிங் ,சிதம்பரம் ஆகியோர் பெரும் பொருளாதார் வல்லுநர்களாக அடையாளம் காணப்பட்டார்கள்.இந்தியாவின் பொருளாதார சிற்பிகள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் .ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் நமது நாட்டுச் செல்வத்தை மீட்க்கும் நோக்கில் இல்லை .

உலகிலுள்ள எல்லா நாடுகளும் இது போன்ற வங்கிகளிலிருந்து பணத்தை மீட்க்க முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். நம் இந்திய நாடு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சுமார் 74 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்திய அரசு தொடர்பு கொண்டால் தங்கள் நாட்டு சட்டதிட்டங்களின் படி உரிய பதில் தருவோம் என்று சுவிஸ் நாட்டு நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

இது தேர்தல் நேரமாக இருக்கின்ற காரணத்தினால், தற்போது இந்தப் பிரச்சனை மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.பிரதான எதிர்கச்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல். கே .அத்வானி ,தாங்கள் ஆட்சிக்கு வந்தால், 100 நாளில் சுவிஸ் வங்கியில் முடங்கிக்கிடக்கும் பணத்தை மீட்கப் போவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விஷயம் இடம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியும்,இடதுசாரிகளும் சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை மீட்பதற்கு பாஜக கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பயுள்ளார்கள்.கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக இதுகுறித்து கேள்வி எழுப்பினால் பதில் சொல்லும் நிலையில் சுவிஸ் நாடோ அல்லது இத்தகைய பத்துக்கும் வங்கிகளோ இல்லை .இப்பொது சர்வதேச அளவில் சுவிஸ் நாட்டிற்க்கும் இத்தகைய பணம் பத்துக்கும் வங்கிகளுக்கும் மிகப்பெரும் அரசியல் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.சுவிசில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதன் மூலம் இந்திய நாடு பெரும் வல்லரசாகவும் , நல்லரசாகவும் திகழ முடியும்.



நன்றி அர்ஜுன் சம்பத்.